உடுமலையில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தனியார் விடுதி மேலாளர் கைது
காவல் நிலையம்
உடுமலைப்பேட்டையில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு. தனியார் விடுதி மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு. தனியார் விடுதி மேலாளர் கைது! உடுமலை பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 9 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்கரத்தில் ஈடுபட உதவியாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதையடுத்து நேற்று உடுமலை தனியார் விடுதி மேலாளர் சாமுவேல் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து கைதுகள் தொடர்வதால் உடுமலை பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
Next Story