எடப்பாடி பழனிசாமியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய பெண்கள்....

எடப்பாடி பழனிசாமியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய பெண்கள்....

எடப்பாடி பழனிசாமி

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து சேலம் சின்னக்கடை வீதியில் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பிரசாரம் செய்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து சேலம் சின்னக்கடை வீதியில் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பிரசாரம் செய்தார். சாலையோரம் இருந்த காய்கறி மற்றும் பூ வியாபாரிகளிடம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு அங்கிருந்த பூ விற்கும் பெண்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சில பெண்கள் எடப்பாடி பழனிசாமியை பார்த்த மகிழ்ச்சியில் அவரது கன்னத்தை பிடித்து கொஞ்சி மகிழ்ந்தனர். இதை சற்றும் எதிர்பாராத அவர் நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் நலம் விசாரித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்களும் நிச்சயம் எங்களது ஓட்டு உங்களுக்குத்தான் என தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story