இவருக்கு சீட் கொடுங்க - காங்கிரஸ் தலைவருக்கு தபால்

இவருக்கு சீட் கொடுங்க - காங்கிரஸ் தலைவருக்கு  தபால்

தபால் அனுப்பிய காங்கிரசார் 

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜீக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திருச்சி காங்கிரசார் இ-தபால் அனுப்பினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.அடைக்கலராஜ் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 4 முறை போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது மகனும், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜீக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவர் புத்தூர் சார்லஸ் தலைமையில் காங்கிரசார் திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து இ-தபால் அனுப்பினர். அந்த தபாலில், காங்கிரஸின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது

Tags

Read MoreRead Less
Next Story