துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு!

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story