லிப்ட் கொடுத்து பள்ளி மாணவனிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது

லிப்ட் கொடுத்து பள்ளி மாணவனிடம்  நகை பறிப்பு - வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட அருள் ஆன்றோ ஷாஜின்

நாகர்கோவிலில் பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாணவனுக்கு லிப்ட் கொடுத்து அழைத்து சென்று நகைகளை மிரட்டி பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி கிறிஸ்டியன் நகரை சேர்ந்த 17 வயது மாணவன் பிளஸ்-1 முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவன் நாகர்கோவிலில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு,வீட்டிற்கு வருவதற்காக நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிள்ளை தோப்பை சேர்ந்த அருள் ஆன்றோ ஷாஜின்(37) உன்னை வீட்டில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி மாணவன் பைக்கில் ஏறினார்.

இதனை அடுத்து ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் பைக்கை நிறுத்திய அருள் ஆன்றோ ஷாஜின், மாணவனிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுப்பட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் 3 கிராம் மோதிரம் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை மிரட்டி பறித்துவிட்டு சென்றுள்ளான், இதுகுறித்த மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாங்சங் டோபா பூட்டியா உத்தரவின் பேரில் ராஜக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்காமல் பகுதியில் வைத்து அருள் ஆன்றோ ஷாஜினை கோட்டார் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடனடியாக துரிதமாக செயல்பட்ட கோட்டார் காவலர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags

Next Story