கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல்

கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல்

மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா ஏற்பாட்டின் பேரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் மற்றும் எம்ஆர்கே கல்வி குழும தலைவர் எம்ஆர்கேபி கதிரவன் வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் காசிராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் பகுதி செயலாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story