நாமக்கல்லில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
நாமக்கல்லில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
நாமக்கல்லில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி பிறந்த நாள் விழா நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, தஞ்சை மாவட்டம் கும்பகோனம் அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில், மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு மகனாகப் பிறந்தார். தற்போது த.மா.கா. கட்சியின் மாநிலத் தலைவராகவும், ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அவரது பெயரில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் நுழைவு வாயில் முன்பு, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட த.மா.கா தலைவர் கோஸ்டல் இளங்கோ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் நகர தலைவர் சக்திவெங்கடேஷ், முன்னாள் தலைவர் சுப்பிரமணி, த.மா.கா பிரமுகர்கள் பெருமாள், சிவா, பார்வதி, மணிமேகலை, செங்கோடன், செங்கோட்டையன், சொக்கலிங்கம், சந்திரசேகர், சந்திரஹாசன், சரவணன், காமராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.