எருமப்பட்டியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே வாசன் பிரச்சாரம்

எருமப்பட்டியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே வாசன் பிரச்சாரம்

ஜி.கே வாசன் பிரச்சாரம் 

எருமப்பட்டி பஸ் நிலையம் பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரம் செய்தார்.

எருமப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா வேட்பாளர் கேபி ராமலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி கே வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொரு தேர்தல் முக்கியமானது என்றாலும் தற்போது நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவின் மக்களுக்கு மிக மிக முக்கியமானதாகும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகு நாடு படிப்படியாக வளர்ந்து வருகிறது,

என்பதில் மாற்றுக்கருத்து இல்லை காரணம் 7 வருடங்கள் இல்லாத வளர்ச்சியை பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையான பாரதிய ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தி இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது என்பது உண்மை இந்த மக்கள் பணி மேலும் தொடர வேண்டும் பிரதமரின்,

ஏழை எளிய நடுத்தர மக்களின் திட்டங்கள் இன்னும் தொடர வேண்டும் அதன் அடிப்படையில் மகளிர் வாழ்க்கை தரும் முன்னேற்றம் மீனவர்கள் நெசவாளர்கள் வியாபாரிகள் விவசாயிகள் பல்வேறு தொழில் நடத்துவோர் இளைஞர்கள் அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு மத்திய பாஜகஅரசு நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் தாமரைச் சின்னத்தில் அழிக்கின்ற வாக்குகள் என்பது இந்தியாவின் வெற்றிக்கு அளிக்கும் வாக்குகள் ஆகும் தொகுதியின் வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்காகும் என்பதை மறந்து விடக்கூடாது பாஜக அரசு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசிய ஜி கே வாசன் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 319 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் 37 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாய்வு வழங்கப்பட்டுள்ளது 5 கோடி பேருக்கு மக்கா கடன்கள் வழங்கப்பட்டு மகளிர் பயன்பெற்று வருகிறார்கள் நடுத்தர மக்கள் சுகாதார வசதிகளை பெற குறைந்த விலையில் மருந்துகள் வழங்க மருந்தகங்கள்,

ஏற்படுத்தப்பட்டுள்ளன சாலையோர வியாபாரிகளுக்கு முன்னேற்றம் பெற சாலையோர விஷ்வா நிதி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வாழ்வதாரம் உயர்த்துவதற்கும் இந்தியாவில் முதலிடம் பிடித்து கோழி வளர்ப்பு தொழிலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் நாமக்கல் தொகுதி,

இத்தொழில் தொழிலை மீண்டும் பொலிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு துணை நிற்கும் தமிழக அரசு கோழிப்பண்ணை தொழிலுக்கு முறையான வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்றாலும் மத்திய அரசு அவற்றை ஏற்படுத்தி தரும் கோழிப்பண்ணைக்கான மின் கட்டணம் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் கோலி தீவன மூலப்பொருள்கள் சோயா சூரியகாந்திக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நமது வேட்பாளர் குறைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார் தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெறுகிறது கொடுத்த வாக்குதீர்களை நிறைவேற்றாத அரசு இந்தியாவில் உள்ளது,

என்றால் திமுக தான் பரிசு கொடுக்க வேண்டும் வாக்களித்த ஏழை எளிய மக்களை காக்க வைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது ஒரு கையால் பணத்தை கொடுத்து அடுத்த கையால் பணத்தை பறிக்கிறது என்றால் அது திராவிட மாடலாகும் கிடைக்கிற உரிமைத் தொகையையும் குடும்பத்தில் உள்ள நபர் மது குடிப்பழத்திற்கு எடுத்துச் செல்கிறார் மகளிர் உரிமைத் தொகை பல பேருக்கு கிடைப்பதில்லை இதில் திமுக கட்சிகள் மட்டுமே பயனடைகின்றன திமுக கொடுத்துள்ளது எல்லாம் பொய் வாக்குறுதிகளாகும் அவற்றை நம்ப வேண்டாம் இனி வருங்காலம் தமிழகத்தில் நல்லவர்கள் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் காலம் வரும் நேர்மை தூய்மை வெளிப்படுத்த தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்,

இப்போது உங்கள் வாக்கு தாமரைக்கு அளிக்க வேண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கேபி ராமலிங்கம் இந்தியா தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சி தலைவர்கள் நன்கு அறியப்பட்டவர் சட்டமன்றம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி போன்ற முதலுதோடு பழகியவர் இன்று பாரத பிரதமரின் நன்கு அறிமுகமானவர்,

ஒரு நல்ல வேட்பாளர் நாமக்கல் தொகுதிக்கு கிடைத்துள்ளதால் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கே பி ராமலிங்கம் தமிழ் மகனோட காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வகுமார் இளங்கோ தமிழ் மங்கர காங்கிரஸ் எருமப்பட்டி நகர தலைவர் கலைச்செல்வன் மற்றும் பாரதிய ஜனதா மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story