சேலம் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் - த.மா.கா பேட்டி

சேலம் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் - த.மா.கா பேட்டி

த.மா.கா பேட்டி

சேலம் மாவட்ட த.மா.கா. தலைவர்கள் கூட்டாக பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் உலகநம்பி (சேலம் மாநகர் மாவட்டம்), சுசீந்திரகுமார் (மேற்கு), செல்வம் (புறநகர்) ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த காளிமுத்து சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக வாழப்பாடியை சேர்ந்த சொக்கலிங்கத்தை கிழக்கு மாவட்ட தலைவராக நியமித்து, ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சொக்கலிங்கம், கட்சியின் மூத்த நிர்வாகி. கிழக்கு மாவட்டத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுவார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்ட பிறகு தான் பா.ஜனதாவுடன் கூட்டணி என்று கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். பா. ஜனதா கட்சியின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார். நாடாளுமன்ற தேர்தலில் சேலம் உள்பட த.மா.கா. சார்பில் போட்டியிட 10 தொகுதிகள் கேட்டு உள்ளோம். சேலம் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.பேட்டியின் போது மாநில இணை செயலாளர் சின்னதுரை, இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், துணைச்செயலாளர் குலோத்துங்கன், மகளிர் அணி துணைத்தலைவர் சிந்தாமணியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story