குமரியில் கண்ணாடி கூண்டு பாலம்: பணிகளில் தொய்வு

குமரியில் கண்ணாடி கூண்டு பாலம்: பணிகளில் தொய்வு
X

குமரியில் கண்ணாடி கூண்டு பாலம்


சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆண்டுக்கு சுமார் 1 கோடி சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கை காரணங்களால் சில நேரம் படகுகள் இயக்க முடிவதில்லை . இதனால் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது . இதைத்தொடர்ந்து கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

இந்த பணி தொடங்கி 6 மாதங்கள் ஆன பிறகும் திருவள்ளுவர் சிலையில் இணைப்பு பாலத்துக்கான தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர். எனவே பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story