உலக தொழில் முனைவோர்கள் கூட்டம்
உலக தொழில் முனைவோர்கள் கூட்டம்
புதியதாக தொழில் துவங்குபவர்கள் அதிக அளவில் இன்னல்படுகின்றனர் மின் கட்டணமும் அடிக்கடி உயர்கிறது இதனால் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். காட்பாடியில் உலக தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு பேச்சு வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தொழில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான பெருந்திரள் கூட்டத்தில் ரூபாய் 860.50 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நடைபெறுவதையொட்டி வேலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான பெருந்திரள் கூட்டம் காட்பாடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக, 2024ம் ஆண்டு, ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக, வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள பாரஸ் மகாலில் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஓட்டல்கள் உரிமையாளர் சங்கங்களின் மாநில தலைவர் வெங்கடசுப்பு பேசுகையில், ஒற்றை சாளர முறையில் எளிமையாக தொழில் முனைவோர்களும் தொழில் செய்வோர்களும் தங்களின் உரிமைகளை பெறும் வசதியை அரசு கொண்டு வந்தது
ஆனால் அந்த ஒற்றை சாளர முறை என்பது சரியாக செயல்படுவதில்லை அதிகாரிகளும் சரியாக ஒற்றை சாளர முறையை செயல்படுத்துவதில்லை இதனை அரசு அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் . ஒற்றை சாளர முறையால் புதியதாக தொழில் முனைவோர்களும் பாதிக்கப்படுவதாக அனைத்து பலன் களும் அனைத்து தரப்பு தொழில் முனைவோருக்கு செல்லும் வகையில் வழி வகை செய்ய வேண்டும் மேலும் மின் கட்டணத்தையும் உயர்த்தி கொண்டு செல்கிறார்கள் ஆனால் அரசு உடனடியாக இவைகள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கின்ற தொழில்களை எல்லாம் பாதுகாத்து கொடுக்க வேண்டும் என பேசினார் .