பொதுமக்களின் பயனுக்கு வந்தது ஞானகொல்லி தோப்பு மேம்பாலம்

பொதுமக்களின் பயனுக்கு வந்தது ஞானகொல்லி தோப்பு மேம்பாலம்

திருத்தணியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஞானகொல்லி தோப்பு மேம்பாலம் திறக்கப்பட்டது.


திருத்தணியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஞானகொல்லி தோப்பு மேம்பாலம் திறக்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து கொண்டாபுரம் வழியாக, பரவத்துார் செல்லும் சாலையில் ஞானகொல்லிதோப்பு ஓடையில் உள்ளது தரைப்பாலம். இப்பாலம் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம், புதிய மேம்பாலம் கட்டப்பட திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. நபார்டு திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து, வாகனபோக்குவரத்துக்காக, மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லவும், கே.ஜி.கண்டிகையில் இருந்து சோளிங்கர் செல்லவும் இந்த மார்க்கம், விரைவு பாதையாக அமைந்துள்ளது.

Tags

Next Story