ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா!

ஞானமணி கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம்ஞானமணிகல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் 1500 –க்கும் மேற்பட்ட ப்ளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ப.மாலாலீனா குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் தி.கே.கண்ணன் வரவேற்றார்.

விழாவில் சென்னை டாக் சாப் அகாடமியின் முதன்மை செயல் அலுவலரும், ஊக்குவிப்பு பேச்சாளருமான சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் மாணவர்களுடையே பேசியது: கல்வி என்பது கல்லூரி வரை படிப்பது அல்ல. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருப்பது தான் கல்வி. வேலை வாய்ப்பு என்பது நமது வாழ்க்கையின் அங்கமே தவிர அதுவே நம் வாழ்க்கை அல்ல. எந்த ஒரு நிறுவனத்திற்கு சென்றாலும் அங்கு குறைந்தது ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும் என்றும் அங்கு உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியோ தோல்வியோ முதலில் முயற்சி செய்து அதனால் ஏற்படும் தவறுகளில் இருந்து நம்முடைய வாழ்க்கை படிப்பினை கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கில மொழித்திறன் கொண்டு தன்னை யார் வெளிப்படுத்துகிறாரோ அவர்கள் வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற முடியும். வேலைக்கான ஊதியம் என்பது முக்கியமல்ல. வேலையை பயன்படுத்தி சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்பது முக்கியம். தலைமை பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த துறையானாலும் பொறுப்பு நாம் எடுத்துக்கொண்டால், அதிகாரம் தானே வரும். ப்ளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஆடம்பரமான படிப்பை தேர்வு செய்யாமல், தனக்கு பிடித்தமான படிப்பினை தேர்வு செய்ய வேண்டும்.மொபைல் போன்.

சமூக ஊடகங்களை கட்டுப்பாட்டுடன் கையாள வேண்டும். எல்லாவற்றையும் விட ஒரு மனிதனுக்கு ஒழுக்கமே அவசியம் என்பதை உணரவேண்டும். ஒரு செயல் தவறு என தெரிந்து அதனை தொடர்ந்து செய்யக்கூடாது. நல்ல நண்பர்களை தேர்வு செய்வதில் கவனம் அவசியம். நாம் செய்யும் தவறை சுட்டிக் காட்டுகிறவனே நல்ல நண்பன். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள், ஆனால் பிடித்திருந்தாலும் தவறு என்று தெரிந்தால் அதை செய்யாதீர்கள். பிடித்ததை சந்தோஷமாக செய்யும் போது எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

விழாவில் காக்னிசன்ட், டிசிஎஸ், ஹெக்சாவேர், அஸ்பெயர் சிஸ்டம்ஸ், ஓ.எப்.எஸ், முருகப்பா, ஜிலோஜி சிஸ்டம்ஸ், புல் கிரியேடிவ், மோபியஸ், பூர்ணம் இன்போ விசன், அபீபா, மில்கால், அப்பாசாமி அசோசியேட், வெர்னாலிஸ், ஜேரோ, சதர்லேண்டு உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற நேர்காணலில் வேலை வாய்ப்பிற்கு தேர்வான 584 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. முதன்மை நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார், கல்வி இயக்குநர் பி.சஞ்செய் காந்தி, டீன் - ரசாயன அறிவியல் வி.பாஸ்கரன், ஆராய்ச்சி இயக்குநர் எஸ்.செல்வராஜன், இன்னோவேசன் மற்றும் இங்குபேசன் ஆலோசகர் ஆர்.விஜயரங்கன், துணை முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். முடிவில் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.பிரபு நன்றி கூறினார்.

Tags

Next Story