இருசக்கர வாகனத்தில் சென்று ஆசிரியரிடம் தங்க நகை பறிப்பு !

இருசக்கர வாகனத்தில் சென்று ஆசிரியரிடம் தங்க நகை பறிப்பு !

 புகார்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் தங்க நகை பறிப்பு காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அடுத்த பொம்ம அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திலகம் இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திலகம் நேற்று இரவு தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரிமங்கலத்தில் இருந்து பொம்மஅள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் திலகம் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து அவர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story