அத்தியவசிய பணிகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்

அத்தியவசிய பணிகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்

அத்தியவசிய பணிகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

அத்தியவசிய பணிகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அணைகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரப்பி வருகின்றன, நிரம்பியுள்ள நீர் நிலைகளில் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

எனவே, தாழ்வான பகுதிகள், மற்றும் நீர்நிலை அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர்கள் நீர்நிலைகளுக்கோ, நீர் பகுதிகளுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இந்த தொடர் மழை காரணமாக பொது மக்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டால் அதற்கான உதவிகளை நாட அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி அனைவரும் அவசிய மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளையும் செய்து தர அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தயாராக உள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story