மழையால் களையிழந்த ஆட்டுச்சந்தை - விவசாயிகள் ஏமாற்றம்
ஆட்டு சந்தை
அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக ஒட்டன்சத்திரம் ஆட்டுச் சந்தையில் எதிர்பார்த்த அளவு வர்த்தகம் நடைபெறவில்லை. ஆடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இருந்தாலும் பெரிய ஆடு ஒன்று ரூ.23 ஆயிரத்துக்கு விலை போனது.ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழன் அன்று நடைபெறுகிறது. இந்த வாரம் தீபாவளி வருவதால் ஆடுகளை நல்ல விலைக்கு விற்க முடியும் என விவசாயிகள் கருதினர். இதன் காரணமாக ஆட்டுச் சந்தைக்கு பல இனங்களைச் சேர்ந்த ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. வாரந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகும் நிலையில் நேற்று 300 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. வியாபாரிகளும் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Next Story