சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை ஜோர்
தர்மபுரி சந்தைப்பேட்டையில் ஆடுகள் வரத்து அதிகரித்து மேலும் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம் அந்த வகையில் இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய்,செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி,நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை,தடங்கம்,ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி, மாட்லாம் பட்டி, ராஜாபேட்டை, லளிகம், போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 300 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 23ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story