நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
நல்லம்பள்ளி வார சந்தையில் ரூ.47 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் நடக்கும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வார சந்தை நடைபெறும் நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். சிறிய அளவிலான ஆடுகள் 3,000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் ஆட்கள் 18,000 ரூபாய் வரை விற்பனையானது இன்று ரூ.47 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story