விராலிமலை: வரத்து குறைவால் ஆடுகள் விற்பனை மந்தம்
ஆட்டு சந்தை
விராலிமலையில் நடைபெற்ற வார சந்தையில் கார்த்திகை மாதம் என்பதால் ஆடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடைபெற்றது.
விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை அதிகாலை கூடும் சந்தையில் விற்கப்படும் ஆடுகளை வாங்க உள்ளூரிலிருந்து மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முதல் நாளை லோடு வாகனங்களில் வந்து விராலிமலையில் தங்கியிருந்து அதிகாலை தொடங்கும் சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வர். இதனால் விழா காலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வரும் இதனால் சந்தையில் ரூபாய் ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகமாகும்.
இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை முருகன் கோயில்களில் சீசன் தொடங்கியுள்ளது. அசைவ பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறி உள்ளதால் காய்கறி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக கூடிய வார சந்தையில் சுமார் 400க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்தன. இதேபோல் பல்வேறு வெளியூர்களில் இருந்த ஆடுகளை வாங்க வரும் வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். இதனால் குறைந்த விலைக்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் கால்நடை வளர்ப்போர் பெருமளவில் ஆகும் ஈட்ட முடியவில்லை.