கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

ஆட்டு சந்தை

கே வி குப்பத்தில் நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்..
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேட்டில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிகாலை 5 மணியில் இருந்தே ஆடுகள் வந்தவண்ணம் இருந்தன. செம்மறி ஆடுகள், பலநிற வெள்ளாடுகள், கருப்புநிற வெள்ளாடுகள், ஆட்டுக்குட்டிகள் என 400-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் ஒரு ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனையானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகள் விற்பனை இல்லை என வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story