சந்தைப்பேட்டையில் ஆடுகள் விற்பனை ஜோர்
ஆடு விற்பனை அமோகம்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் பிரத்தியேகமாக ஆடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 6 மணி அளவில் கூடிய ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய்,செட்டிகரை, நல்லம்பள்ளி,குள்ளனூர், குண்டலபட்டி நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம்,ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி. மாட்லாம் பட்டி,ராஜா பேட்டை. லளிகம் போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2,000 ரூபாய்க்கு தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 18,000 ஆயிரம் ரூபாய்வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று ஓரே நாளில் 36 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.