ஆட்டு சூப்பா? மாட்டு சூப்பா? எழுந்த புகார் -உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திருவாசல் முன்பு ஆட்டிறைச்சி சூப் கடை நடத்திவரும் சாலையோர வியாபார கடையில் ஆட்டிறைச்சி சூப் என்ற பெயரில் மாட்டுக்கறி சூப் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரிவின்படி, நேற்று ( 29.05.24 ) மாலை அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த கடை உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்ததும், அங்கு மாட்டிறைச்சி சூப்போ அல்லது இதர பாகங்களோ விற்பனை செய்யப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. அதேநேரம் அவரவர்கள் உணவு பழக்க வழக்கங்கள் பொறுத்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவுக்கு அனுமதித்துள்ள எந்தவொரு இறைச்சியையும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் / பதிவுச் சான்றுடன் சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கு தடையேதும் இல்லை என்றும் ஆட்டிறைச்சி என்ற பெயரில் இதரவகை இறைச்சிகளை உபயோகிப்பாளர்களை / வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர்