வீரகனூர் அருகே பட்டிக்குள் புகுந்து ஆடு திருட்டு
கெங்கவல்லி வீரகனூர் அருகே பட்டிக்குள் புகுந்து ஆடு திருட்டு.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர், குத்தகை நிலத்தில் பட்டி அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு, பட்டியில் ஆடுகளை அடைத்துச் சென்றார். நேற்று முன்தினம் காலை, சென்று பார்த்தபோது, ஆடுகளை காணவில்லை. பட்டி காலியாக கிடந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு வீரகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story