திருப்புவனத்தில் 30 கிலோ எடை கொண்ட ஆடு விற்பனை
30 கிலோ எடை கொண்ட ஆடு விற்பனை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய கிழமை கால்நடை சந்தை நடைபெறும், காலை முதல் ஆடு, கோழி உள்ளிட்டவைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள், சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது.
மணல்மேடு, பெத்தானேந்தல், செல்லப்பனேந்தல், அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களது ஆடுகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான் உள்ளிட்ட விசேச நாட்களில் சந்தை களை கட்டும், கார்த்திகை மாதங்களில் கால்நடை விற்பனை குறைவது வழக்கம், இன்று கார்த்திகை முதல் சந்தை என்பதால் ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தன. 10கிலோ எடை கொண்ட ஆடு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம ரூபாய் வரை விற்பனையாகின. விவசாயி ஒருவர் விற்பனைக்கு 30 கிலோ எடை கொண்ட ராட்சத ஆடு கொண்டு வந்திருந்தார். பொட்டப்பச்சேரியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் 34 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சென்றார். இதுபோல சண்டை சேவல் 4 ஆயிரம் ரூபாய்க்கும், கோழி 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும் விற்பனையாகின.