வேப்பனப்பள்ளியில் ஆடுகள் கோழிகள் சந்தை வியாபாரம் அமோகம்
வேப்பனப்பள்ளியில் ஆடுகள் கோழிகள் சந்தை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் வார வாரம் வெள்ளிக்கிழமை காந்தி சிலை அருகில் ஆடுகள் கோழிகள் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் இருந்து வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துமா ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதியில் இருந்தும் ஆடுகள் கோழிகள் வியாபாரத்தில் கொண்டுவரப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ஒரு ஆடு 8000 முதல் 10000 ரூபாய் விற்க்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு வியாபாரம் செய்தனர். ஆடுகள் கோழிகள் அமோகமாக வியாபாரம் நடைபெற்றதால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story