வீரகனூர் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனை

வீரகனூர் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனை

வீரகனூர் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனையானது.


வீரகனூர் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனையானது.

வீரகனூர் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனை ; பக்ரீத் பண்டிகையோட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு சேலம் மாவட்டம், ஆத்தூர் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையில் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த வாரம் ஆட்டுச்சந்தையின் போது ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து, 900க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. வருகின்ற 17ம் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி, ஆட்டு சந்தைக்கு செம்மறி, வெள்ளாடுகள் என, கணிசமான அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வந்ததால் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். 900 ஆடுகள் 1.20 கோடி ரூபாய்க்கும் 500 மாடுகள் 80 லட்சம் ரூபாய் என 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது கடந்த வாரம் ஆடு கிலோ ஒன்றுக்கு 360 முதல் 380 ரூபாய் வரை விற்பனை செய்த நிலையில் இந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 420 முதல் 450 ரூபாய் என கூடுதலாக விற்பனையானது. 10 கிலோ ஆடு 4,500 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story