அதியமான் கோட்டை சிறப்பு சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
அதியமான் கோட்டையில் காளியம்மன் திருத்தேர் விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறும், இந்த நிலையில் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளல் அதியமான் வழிப்பட்ட காளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 2 வாரங்கள் அதியமான் கோட்டையில் வாரச்சந்தை நடைபெறும், நேற்று பிரம்மாண்டமான யாகசாலை பூஜைகள் நடைபெற்று திருவிழா துவங்கியது.இன்று 26-03 -2024 காலை அதியமான் கோட்டையில் சந்தை கூடியது. சந்தையில் சிறிய ஆடுகள் 3000 ரூபாய் முதல் பெரிய அளவிலான ஆடுகள் 22 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story