நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
நல்லம்பள்ளியில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறும் வார சந்தை நடைபெறும் நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று காலை கூடிய சந்தையில் ஏராளமான தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 3,500 ரூபாய்க்கு துவங்கி 17,000 ரூபாய் வரை விற்பனையானது.இன்று ஓரே நாளில் 45 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story