தர்மபுரி சந்தையில் ரூ.32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரியில் இன்று நடந்த வாரச்சந்தையில் ரூ.32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

தர்மபுரி சந்தப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறும் வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் பிரத்தியேகமாக ஆடுகள் விற்பனைக்காக ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகின்றது . இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளான சோலை கொட்டாய் ,செட்டிகரை, நல்லம்பள்ளி,குள்ளனூர், குண்டலபட்டி நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம்,ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி,ராஜா பேட்டை, லளிகம்,போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 300 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story