தர்மபுரி சந்தையில் ரூ.28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தருமபுரி சந்தைப்பேட்டையில் இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ரூ. 28லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறும் வார சந்தை நடைபெறும் நாட்களில் பிரத்யேகமாக ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 6 மணிக்கு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இன்று ஒரு சிறிய ஆட்டுக்குட்டி விலை 2000 முதல் பெரிய ஆடு 20000 ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story