புதுக்கோட்டை வாரச்சந்தையில் ஆடுகள் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை வாரச்சந்தையில் ஆடுகள் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விற்பனைக்கு வந்த ஆடுகள்
புதுக்கோட்டை வாரச்சந்தையில் ரூ.3கோடிக்கு ஆடுகள் விற்பனையானது

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை என்ற இடத்தில் நகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடத்தப்படுவது. வழக்கம் அவ்வகையில் ரம்ஜான், தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் பண்டிகைக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமைகளில் புதுக்கோட்டை வாரச்சந்தையில் ஆடுகள் மாடுகள் காய்கறிகள் என பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அதனை புதுக்கோட்டை மட்டுமல்லாது அருகில் உள்ள தஞ்சாவூர் திருச்சி சிவகங்கை பட்டுக்கோட்டை அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வியாபாரிகளும் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு வாரச்சந்தை கூடியது குறிப்பாக ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள் காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழரின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருவதை முன்னிட்டு கிராமங்களில் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

அப்பொழுது தங்களது உற்றார் உறவினர்களுக்கு அசைவம் பரிமாறப்படும். புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண் பெண் பல்வேறு வேலைகளில் தமிழக முழுவதும் வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்கள் குடும்பம் குடும்பமாக தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு வந்து பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கம். அப்பொழுது அவர்களுக்கு அசைவம் பரிமாறுவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் ஆடுகள் விற்பனை இன்று சுமார் மூன்று கோடி ரூபாய் தாண்டி உள்ளது.

மேலும் இன்று இரவு 8 மணி வரை இந்த வாரச்சந்தை நடைபெறுவதால் ஆடுகள் மட்டும் அல்ல அது மாடுகள் காய்கறிகள் மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்கப்படும். மொத்தமாக இன்று மாலைக்குள் பல கோடி ரூபாய்க்கு அளவிற்கு இப் பொருட்கள் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story