ரம்ஜான் பண்டிகையொட்டி 2 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்!

ரம்ஜான் பண்டிகையொட்டி 2 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்!

ஆடு

மேலூரில் ரம்ஜான் பண்டிகையொட்டி 2 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்: தேர்தல் நடைமுறை காரணமாக பணம் கொண்டு வர முடிவதில்லை என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலூரில் ரம்ஜான் பண்டிகையொட்டி 2 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்: தேர்தல் நடைமுறை காரணமாக பணம் கொண்டு வர முடிவதில்லை என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சந்தைப்பேட்டையில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கால்நடை வாரச்சந்தை நடைபெறுகிறது. இதில் திங்கள்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி விற்பனைக்கான சந்தை நடைபெற்று வரும் நிலையில், வரும் 27ஆம் தேதி இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதால் ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது.

இதற்காக, மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதனை வாங்குவதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர்.

இதில், ஒரு ஆட்டின் விலை அதன் எடையைப் பொறுத்து 8000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டு கிடாயின் விலை 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த சந்தையில் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

தற்பொழுது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பெருமளவில் பணம் கொண்டு வர முடியாததால், வர்த்தகம் மந்தமான நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாகவும், பண்டிகை காலங்களில் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் இடத்தில் தற்போது, 2 கோடி ரூபாய் வரை மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையோடு தெரிவித்தனர். மேலும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கும்போது அட்வான்ஸ் தொகையை மட்டும் செலுத்தி விட்டு மீதி பணத்தை G.Pay மூலம் பண பரிவர்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story