கம்பைநல்லூரில் 26 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

கம்பைநல்லூரில் 26 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பை நல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் ஆட்டு சந்தை நடை பெற்று வருகிறது. நேற்று நடந்த சந்தையில் கம்பைநல்லூர் மற்றும் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற சந்தையில் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து ஒரு ஆடு 5,700 ரூபாய் முதல் 9,800 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம் 26 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story