நல்லம்பள்ளியில் 55 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து சரிந்ததால் விற்பனை அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை கூடிய சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 3,000 ரூபாய்க்கு துவங்கி 18, 000 ரூபாய் வரை விற்பனையானது இன்று ஓரே நாளில் 55லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், ஆடுகள் வரத்து சரிந்ததால் விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story