பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.


திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், திருப்புவனத்தில் அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ஆடு வளா்ப்பவா்களும், ஆட்டு வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான செம்மறி, வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதேபோல, ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் இஸ்லாமியா்களும் சந்தையில் திரண்டதால் சந்தை களைக்கட்டியது. ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் 1 கிலோ ஆட்டுக்கறி ரூ.700-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.

Tags

Next Story