பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

  செஞ்சி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தவாரம் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

செஞ்சி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தவாரம் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடுகள் விற்பனையும் அதிகமாக நடைபெறும். இவைகளை வாங்குவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. வெள்ளாடுகள் ஜோடி ரூபாய் 7ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூபாய் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதன் மூலம் சமார் ரூ.3 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனை நடந்து இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags

Next Story