தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் -கோபி காந்தி
தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற பாடுபடுவோம் என அறிக்கை
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் தமிழக மக்களுக்கு சமூக சேவையாற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் உள்ளார். விஜய் புகழ், செல்வாக்கு நிறைந்த வாழ்வை வாழ்ந்து வருகிறார். இருந்தும் அரசியலுக்கு வருகிறார்,
உண்மையாக மக்களுக்கு சமுதாய சேவையாற்ற நோக்கம் கண்டிப்பாக இருக்கும். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வாக்களித்து தமிழக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து நடிகர் விஜய்யை தமிழகத்தின் முதலமைச்சராக்கி ஏழை, எளிய மற்றும் பொது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி கொள்வோம். தமிழக மக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் பாதம் தொட்டு வணங்கி கேட்டு கொள்கிறேன்.
தமிழக மக்கள் நன்மைக்கான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் பார்ப்பீர்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பிறகு மக்களுக்கான ஆட்சி இதுவரை நடைபெறவில்லை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் மீண்டும் அந்த ஆட்சி நடைபெறும் என்று கூறி தமிழக மக்கள் அனைவருக்கும் நான் முன்னின்று பொறுப்பேற்று கொள்கிறேன். சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் மூலம் கடந்த பதினாறு வருடங்களாக உங்கள் ஒவ்வொருவருடனும் பயணித்து வருகிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்துள்ளீர்கள்.
மக்களுக்கான நல்லவர்களை மட்டுமே ஆதரிப்போம் என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில் கூறியுள்ளார்.