தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பள்ளியகரத்திலுள்ள தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பள்ளியகரம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை காலை கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால ஏகாசாலை பூஜை, பூர்ணாவதி பூஜை , உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு ஏக சாலையில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்படு செய்யப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story