அழகு பார்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆலங்குளம் அருகே சுரண்டையில் அழகு பார்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆலங்குளம் அருகே சுரண்டையில் அழகு பார்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் பிரசித்தி பெற்ற 7 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு மேளதாளங்கள், வானவேடிக்கை முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்து கலசங்களில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story