கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா
கருட வாகன வீதி உலா
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி 8 மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6-வது நாளான நேற்று தங்க கருட சேவையை முன்னிட்டு பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சன்னதி தெரு, சுபாராவ் தெரு, பைராகிமட தெரு உள்ளிட்ட 8 மாட வீதிகளில் சாமி உலா நடந்தது. பக்தர்கள் வீடுகள் தோறும் கற்பூர ஆரத்தி காண் பித்து சாமியை வழிபட்டனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.