ரூ.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் பறிமுதல்

ரூ.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வைரம்

மதுரையில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 18 கோடி மதிப்பிலான 29.7 கிலோ தங்கம் மற்றும் வைரத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை விமானநிலையம் அருகேயுள்ள பெருங்குடி சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் 3 பெட்டிகளில் இருந்து 18 கோடி மதிப்பிலான 29.70 கிலோ தங்கம் மற்றும் வைரம் இருப்பதை பார்த்து அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த நபர் அளித்த ஆவணம் முழுமையாக இல்லாத நிலையில் 18 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தெற்கு சார்நிலை கருவூலத்தில் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து முறையான உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட தங்க நகைகள் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலில் மாநகர் பகுதியில் உள்ள நகைகடைகளுக்கு எடுத்துவந்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உரிய சரியான ஆவணங்கள் இல்லாத நிலையில் இன்று காலை உரிய ஆவணங்களை சமர்பிப்பதாக தெரிவித்த நிலையிலும் ஆவணங்கள் சமர்பிக்கபடாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையான வருமானவரித்துறை அதிகாரிகளிடத்தில் நகைகள் ஒப்படைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை நடத்திவருகிறார்.

Tags

Next Story