விழுப்புரம் : ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

விழுப்புரம் : ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

விழுப்புரத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மயிலம், ஒலக்கூர், மரக் காணம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் 177 ஏழை பெண்களுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கினார்,

இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜாம்பாள், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒலக்கூர் சேர்மன் சொக்கலிங்கம், மரக்காணம் சேர்மன் தயாளன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சேது நாதன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி மாறன், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொரு ளாளர் ரவி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பழனி, மாவட்ட துணை சேர்மன் சீலா தேவி சேரன், மயிலம் துணை சேர்மன் புனிதா, மாவட்ட கவுன்சிலர் விஜயன், மாவட்ட நிர்வாகி அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story