ராமநாதபுரம் கராத்தே போட்டியில் தங்கம்
ராமநாதபுரத்தில் சர்வதேச கராத்தே போட்டியில் மளிகை கடைக்காரர் மகன் தங்கம் வென்றார்.
ராமநாதபுரத்தில் சர்வதேச கராத்தே போட்டியில் மளிகை கடைக்காரர் மகன் தங்கம் வென்றார்.
ராமநாதபுரம் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி மே மாதம் ஐந்தாம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரரான ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகே உள்ள ஆர்.சி.வேப்பமரத்து பனை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ஜெகதீஷ் பிரதீப் கலந்து கொண்டார். இந்த கராத்தே போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட கட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ப்ளஸ் 60 எடை சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இதனையடுத்து வெற்றி பெற்று இந்திய தேசத்துக்கும், தமிழகத்துக்கும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தாயகம் திரும்பிய ஜெகதீஷ் பிரதீப்புக்கு நரிப்பையூர் கிராமத்தில் நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தலைமையில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆப்பநாடு மறவர் சங்க துணை தலைவர் சுந்தர கணபதி,திமுக மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ், நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை நிர்வாகிகள் ராஜபாண்டி, கென்னடி, நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் செண்பகப் பாண்டியன், தமிழரசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story