60 இலட்சம் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!
விராலிமலை அருகே 60 இலட்சம் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.
புதுகோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 60 இலட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத்தணிக்கை நடத்தினர்.விராலிமலை சுங்கச்சாவடி அருகே வேன் ஒன்றை சோதனை செய்து விசாரணை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. நிலையான கண்காணிப்பு குழுவினர் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தங்க நகைகளை எடுத்துச் சென்ற பிவிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் தங்க நகைகள் கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.பின்னர் இதில் 1200 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது இதன் மதிப்பு ரூபாய் 60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்டிஓ தெய்வநாயகி, ஆர்டிஓ உதவியாளர் பழனிச்சாமி, தாசில்தார் சூரியபிரபு ஆகியோர் இலுப்பூர் அரசு கருவூலத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை அனுப்பி வைத்தனர்.
Next Story