பரமத்தி வேலூரில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

பரமத்தி வேலூரில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

பரமத்தி வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 13 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

பரமத்தி வேலூரில் பெண்ணிடம் 13 பவுன் தங்க நகை பறிப்பு: போலீஸார் விசாரணை

பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 13 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், சுல்தான்பேட்டை, சேடா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வக்கீல் பழனிசாமி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி மணிமேகலை (65). சம்பவத்தன்று மாலை, மணிமேகலை பரமத்தி வேலூர் பஸ் நிலையத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பஞ்சமுக விநாயகா் கோயில் அருகே சென்ற போது, அவரை பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா், மணிமேகலையிடம் பேச்சுக் கொடுத்து, அவருடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

அப்போது மணிமேகலையை ஏமாற்றி அவா் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் எடையுள்ள தங்க நகையைப் பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் ப.வேலூர் போலீஸீல் புகார் அளித்தார். பரமத்தி வேலூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். திருட்டு போன தங்க நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது..

Tags

Read MoreRead Less
Next Story