கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம்!
பஞ்சாபில் போராடிய விவாசாயிகளை இழிவாக பேசிய பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர்க்கு தந்தை பெரியார் திருவுருவ படம் பொறித்த 1 பவுன் தங்க மோதிரம் பரசு அளிக்க உள்ளதாக த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.தான் அறைந்ததற்கு காரணம் பஞ்சாப்பில் போராடி வரும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் ரூ.100,200க்கு கூலிக்கு போராட்டம் நடத்துகின்றனர் என இழிவாக பேசியுள்ளார். அந்த போராட்டத்தில் எனது தாயாரும் கலந்து கொண்டுள்ளார்.எனது தாய்,விவசாயிகள் நலனுக்காக போராடியவர் அவரையும், விவசாயிகளையும் இழிவாக பேசியாக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைத்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.பெண் காவலர் குல்விந்தர் கவுரின் வீரத்தை போற்றும் வகையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் திருவுருவம் பொறித்த 1பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்க உள்ளதாக த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story