அஞ்சலகத்தில் தங்கம் சேமிப்பது அதிகரிப்பு...5 மடங்கு!:ரூ.12.47 கோடிக்கு பத்திரங்கள் விற்பனை!

அஞ்சலகத்தில் தங்கம் சேமிப்பது அதிகரிப்பு...5 மடங்கு!:ரூ.12.47 கோடிக்கு பத்திரங்கள் விற்பனை!

அஞ்சலகத்தில் தங்கம் சேமிப்பு 

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே, தங்கம் பத்திரமாக சேமிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே, தங்கம் பத்திரமாக சேமிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த இரு நிதி ஆண்டுகளைவிட நடப்பாண்டு வருவாய் தங்கம் 5 மடங்காக விற்பனை மற்றும் வருவாய் உயர்ந்திருக்கிறது. காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு நிதி, கால வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பு கணக்குகள் துவக்குவதை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வரிசையில், மத்தியரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கம் சேமிப்பு பத்திர திட்டத்தில், பொதுமக்கள் சேருவதற்கு, அஞ்சல் துறையினரும் அடிக்கடி அழைப்பு விடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், ஒவ்வொரு நிதி ஆண்டிலும், 3 கிலோ வரை தங்கம் விற்பனையாகி சேமிப்பு பத்திரமாக செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நிதி ஆண்டை காட்டிலும், நடப்பு நிதி ஆண்டு 5 மடங்கு அதிகரித்து உள்ளது என, அஞ்சல் கோட்டத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story