திண்டுக்கல் அஞ்சலகங்களில் தங்க சேமிப்பு பத்திரத் திட்டம் துவக்கம்

திண்டுக்கல் அஞ்சலகங்களில் தங்க சேமிப்பு பத்திரத் திட்டம் துவக்கம்

திங்கள்கிழமை (பிப். 12) முதல் 16-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை

திங்கள்கிழமை (பிப். 12) முதல் 16-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்க சேமிப்புப் பத்திரத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் வருகிற 16-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் கோட்ட அஞ்சலக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: இந்திய அஞ்சல் துறை சாா்பில் தங்க சேமிப்பு பத்திரம் குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் திங்கள்கிழமை (பிப். 12) முதல் 16-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திர திட்டத்தில் சேர விரும்புவோருக்கு வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவை மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றனா்.

Tags

Next Story