கன்னியாகுமரி உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி
ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
கன்னியாகுமாரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நகர் விழாவான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பழைய ஆலயத்தில் திருப்பலி, நோயாளிகளுக்கு சிறப்பு திரும்பலி போன்றவை நடைபெற்றது. மாலையில் சிறப்பு ஆராதனையும், இரவு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி நடந்தது. பத்தாம் திருவிழாவான நேற்று அதிகாலை 4மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடந்தது. பின்னர் ஒன்பது மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான மாதா மற்றும் சூசையப்பர் இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பங்கு மக்கள் திரண்டனர் . தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்குதல், நற்கருணை ஆசிர் போன்றவை நடைபெற்றது.
Next Story