சேலம் அருகே கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சேலம் அருகே கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
X

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி டால்மியா போர்டு பகுதியில் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி டால்மியா போர்டு பகுதியில் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி டால்மியா போர்டு பகுதியில் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது. கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி தாளாளர் சாந்தி முத்துசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா ஆண்டுஅறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி, மணிப்பால் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் பாரதிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட, வட்டார அளவில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கோகோ, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும், பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி தர்ஷினி நன்றி கூறினார்.

Tags

Next Story